கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா 302, கேரளா 241, தமிழகம் 124, டெல்லியில் 120, உத்தரப்பிரதேசம் 103, தெலங்கானா 94, ராஜஸ்தான் 93 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்த நிலையில், 133 பேர் குணமடைந்துள்ளனர். இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 240 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.