CORONAVIRUS TREATMENT HOSPITAL ILAVARASI DISCHARGED

Advertisment

மருத்துவமனையில் இருந்து சசிகலாவின் உறவினர் இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவின் உறவினரான இளவரசிக்கு ஆர்.டி-பி.சி.ஆர் (RT-PCR) கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, இளவரசி கடந்த ஜனவரி 22- ஆம் தேதி அன்று பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவரின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் கரோனா சிகிச்சை முடிந்து இளவரசி மருத்துவமனையில் இருந்து இன்று (02/02/2021) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து, அவர் மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.சசிகலா கடந்த ஜனவரி 27- ஆம் தேதி விடுதலையான நிலையில் பிப்ரவரி 5- ஆம் தேதி இளவரசி விடுதலை செய்யப்பட உள்ளார்.

Advertisment

சசிகலாவுக்கு கரோனா உறுதியான நிலையில், அவருடன் சிறையில் இருந்த அவரது உறவினரான இளவரசிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா உறுதியாகி, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.