Advertisment

கரோனா இரண்டாவது அலையில் 594 மருத்துவர்கள் பலி!

coronavirus second wave india doctors incident

Advertisment

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்து சில நாட்களாகக் குறைந்துவருகிறது. இந்த நிலையில், கரோனா இரண்டாவது அலையில் இதுவரை நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக அகில இந்திய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. மாநிலம் வாரியாக உயிரிழந்த மருத்துவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, டெல்லியில் 107 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும், தமிழகத்தில் 21 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 67 மருத்துவர்களும், குஜராத்தில் 31 மருத்துவர்களும், ஆந்திரப்பிரதேசத்தில் 32 மருத்துவர்களும், தெலங்கானாவில் 32 மருத்துவர்களும், ஜார்க்கண்டில் 39 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யாத இளம் மருத்துவர்கள் பலரும் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

incident Doctors coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe