கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
அதில், 'போதிய அளவு சுடு தண்ணீர் பருக வேண்டும். நடைப்பயிற்சி, யோகா பயிற்சி, சுவாசப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.போதிய அளவு ஓய்வு எடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும். புகைப்பிடிப்பதை கைவிட வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.