Skip to main content

நாடு முழுவதும் 2-வது நாளாக ஊரடங்கு!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்பட உலக நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். 

coronavirus national peoples police delhi

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். 
 

தமிழகம் உள்பட நாடு முழுவதும் இரண்டாவது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாகச் சாலைகளில் அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். டெல்லியில் மருத்துவப் பணியாளர்கள், ஊடகத்தினருக்கு மட்டுமே அனுமதி எனச் சாலையில் போர்டு வைத்துள்ளனர். 

coronavirus national peoples police delhi

தமிழகத்தில் முதல் நாளைக் காட்டிலும் 2- வது நாள் ஊரடங்கில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து கண்டப்படுகிறது. தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் எனக் காவல்துறை எச்சரித்ததால் ஆள் நடமாட்டம் குறைவாகக் காணப்படுகிறது. 
 

சார்ந்த செய்திகள்