செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டதை எதிர்த்தும், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராகவும் மாணவர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (03/09/2020) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம். யுஜிசி விதிமுறைகளுக்குட்பட்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம்' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற செமஸ்டர் தேர்வுகளை நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.