Skip to main content

சினிமா படப்பிடிப்புகளுக்கான வழிமுறைகள் வெளியீடு!

Published on 23/08/2020 | Edited on 23/08/2020

 

coronavirus lockdown minister prakash javadekar announces relaxation film and tv

நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.

 

அதில், "படப்பிடிப்பு தளங்களில் 6 அடி தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும். ஒப்பனை கலைஞர்கள், சிகையலங்காரக் கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் கவச உடை அணிந்து பணியாற்ற வேண்டும். படப்பிடிப்பு தளத்தில் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், எச்சில் துப்பக்கூடாது.

coronavirus lockdown minister prakash javadekar announces relaxation film and tv

படப்பிடிப்பு தளத்தில் கேமராவின் முன் நடித்துக்கொண்டிருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்கள், ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது. உடைகள், விக், ஒப்பனை பொருட்கள் பகிர்ந்து கொள்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்". இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கலைஞர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்குவதே நோக்கம்; வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் உடனே சினிமா படப்பிடிப்புகளைத் தொடங்கலாம் என  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வேலை நிறுத்த அறிவிப்பு? படப்பிடிப்புகள் முடங்கும் அபாயம்

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

cinema shooting maybe stop june1

 

தமிழ் திரைப்படங்கள், டிவி தொடர்கள், வெப் தொடர்கள் என சினிமா படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் பல்வேறு தொழில்துறைகள் முடங்கின. அதில் குறிப்பாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் சினிமா திரை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கரோனா தொற்று குறைந்து சினிமா படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளிப்புற படப்பிடிப்பு குழு, தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் அமைப்பில் இருந்து ஆட்களை பணி அமர்த்துகின்றனர். 

 

இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் அமைப்புகள்(பெப்சி) புதிதாக சேரும் நபர்களிடம் 3 லட்சம் செலுத்தி  உறுப்பினராக சேர வேண்டும் என்று கூறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை கண்டித்து வெளிப்புற படப்பிடிப்பு குழு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது . இதனால் பெரிய நடிகர்கள் படம் முதல் டிவி தொடர்களின் படப்பிடிப்புகள் வரை அனைத்தும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

 

Next Story

'விசாக்களை பெறுவதற்கான நடைமுறைகளில் தளர்வு'- அமெரிக்க அரசு அறிவிப்பு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

US government announces 'relaxation of visa requirements'

 

கரோனா பரவல் காரணமாக, சில விசாக்களை நேர்காணல் இல்லாமல் தரும் வகையில், அமெரிக்க அரசு விதிகளில் சில தளர்வுகளை அளித்துள்ளது. 

 

மூன்றாவது ஆண்டாக கரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், விசா வழங்குவது தொடர்பாக தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, தனித்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H1B விசா, கல்வி தொடர்பாக வழங்கப்படும் H3, நிறுவனங்களுக்கு இடையே பணி மாறுவோருக்கு வழங்கப்படும் O விசா ஆகியோருக்கு நேர்காணல்கள் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நேர்காணல் இல்லாமல் 2022- ஆம் ஆண்டு டிசம்பர் வரை, இத்தகைய விசாக்களுக்காக தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.