ADVERTISEMENT

வட்டிக்கு வட்டி குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்!

04:31 PM Sep 10, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆகஸ்ட் 31 வரையிலான ஆறு மாத தவணை (இ.எம்.ஐ) காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (10/09/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'மாதத் தவணையின் (இ.எம்.ஐ) வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் பற்றி இரண்டு வாரங்களில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உயர்மட்டக்குழு ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் மாதத் தவணை செலுத்தாதவர்களை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற உத்தரவு தொடரும். கடன் தள்ளுபடி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறும். வழக்கு விசாரணையை இனி ஒத்திவைக்கக் கோரக் கூடாது என நீதிபதிகள் மத்திய அரசை அறிவுறுத்தினர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT