உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,000த்தை கடந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,000 மேல் அதிகரித்துள்ளது. இத்தாலியில் 3,405, சீனாவில் 3,245, ஈரானில் 1,284, ஸ்பெயினில் 831 பேர் கரோனாவால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206-ல் இருந்து 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாட்டினர் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 49 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.