Advertisment

இந்தியாவில் கரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியது!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

Advertisment

coronavirus india strength increased union health ministry

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,789-லிருந்து 5,194 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124-லிருந்து 149 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353-லிருந்து 402 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,018, தமிழ்நாடு 690, டெல்லி 576, தெலங்கானா 364, கேரளா 336, ராஜஸ்தான் 328, ஆந்திரப்பிரதேசம் 305, மத்தியப்பிரதேசம் 229 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

union health ministry India coronavirus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe