ADVERTISEMENT

கரோனா தடுப்பு- 30 மாநிலங்களில் ஊரடங்கு!

07:59 AM Mar 24, 2020 | santhoshb@nakk…

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக யூனியன் பிரதேசங்கள் உள்பட நாட்டின் 30 மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சண்டிகர், கோவா, ஜம்மு& காஷ்மீர், நாகலாந்து, ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, லடாக், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், பீகார், பஞ்சாப், திரிபுரா, சத்தீஸ்கர், ஆந்திரா, புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, இமாச்சல் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊரடங்கு, 144 தடை உத்தரவை மீறியதால் 1995 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேபாளத்தில் கரோனாவால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT