/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_48.jpg)
உலகையே அச்சுறுத்திலட்சக்கணக்கான உயிர் பலிகளை வாங்கிய கரோனா வைரஸை எளிதில் யாராலும் மறக்க முடியாது. உலகில் முதல் முறையாகச் சீனாவின்வுகான் நகரில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த கரோனாவைரஸ், 2020 ஆம் ஆண்டின்தொடக்கத்தில் உலகின் மற்ற நாடுகளுக்கும்பரவிஏராளமான மரணங்கள், ஊரடங்கு, பொருளாதார முடக்கம் எனப் பல இன்னல்களுக்குஉள்ளாக்கியது. அதன் பிறகு முகக்கவசம், தடுப்பூசி எனப் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்றிபடிப்படியாகக் கரோனாதொற்றுகுறைந்துஉலக நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே கரோனாவைரஸ் உருமாற்றமடைந்துஒமிக்ரானாக பலருக்கும் பரவி வந்த நிலையில், தற்போது XXB என்ற புதிய வகைகரோனா வைரஸ்பரவி வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது. வைரஸ் மாற்றங்களைக் கண்காணித்து வரும்GISAIDஎன்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு, இந்தியாவில் 9 மாநிலங்களில் 380XXB பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இந்தியாவில் கரோனாபரவல் குறைந்து மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத்திரும்பியுள்ள நிலையில் தற்போதுமீண்டும் கரோனாவைரஸ் உருமாறி XXBஎன்ற புதிய வகையில் பரவி வருவது மக்களின் மத்தியில் சிறிய அச்சத்தைக் கிளப்பியுள்ளது. ஆனால் வைரஸ்களின் உருமாற்றம் பொதுவானது என்றும்தொடர்ந்து வைரஸ்களின் உருமாற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் சுகாதாரத்துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)