இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக 14,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிப்பதும், மாஸ்க் அணிவதும்தான் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்பதால், அதை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_272.jpg)
ஆனால் தங்களுக்கெல்லாம் கரோனா தொற்று ஏற்படாது எனச்சொல்லி அரசின் உத்தரவை அலட்சியப்படுத்தி 30 சதவித மக்கள் வெளியே சுற்றிவந்தனர். இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சட்ட நடவடிக்கைகளை கடுமைப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், இறைச்சிகடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சில மணி நேரத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us