சுமார் 80 நாடுகளில் கரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது.

Advertisment

corona virus preventive measures in delhi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பயம் இல்லாமலும், அதேநேரம் கவனத்துடனும் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனா வைரசால் 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 28529 பேர் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, டெல்லியில் அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்துள்ளது டெல்லி அரசு. மேலும், டெல்லியில் அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்பப் பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..