கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல்...!

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

corona virus issue - Rahul Gandhi Condemned BJP

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிகவளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிக குறைந்த அளவில் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விமர்சித்துள்ள வயநாடு தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, "இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை. மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது" என தெரிவித்துள்ளார்.

corona virus Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe