சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் பரவ தொடங்கிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 160 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. உலக அளவில் 1,98,214 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதற்கிடையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு இன்று கூடியது. கூட்டத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை இரவு 8 மணிக்கு கரோனா பாதிப்பு குறித்தும் அதனை எதிர்கொள்வது குறித்தும் மோடி பேச உள்ளதாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
PM Shri @narendramodi will address the nation on 19th March 2020 at 8 PM, during which he will talk about issues relating to COVID-19 and the efforts to combat it.
— PMO India (@PMOIndia) March 18, 2020