Skip to main content

கரோனா எச்சரிக்கை ! அமைப்பு சாரா தொழிலாளர்கள் மீது அதிக கவனம் தேவை! -கனிமொழி வலியுறுத்தல்

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

கரோனா வைரஸ் குறித்து மக்களவையில்,  பல்வேறு விசயங்களை முன்னிறுத்தி தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார் மக்களவையின் திமுக துணைத்தலைவர் கனிமொழி எம்பி. அவருடையை பேச்சுக்கு மதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு.

 

 Corona virus issue - Kanimozhi Parliament speech

 அந்த வகையில், கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் , அவர்களுக்கு அரசு முன்னுரிமை தந்து உதவ வேண்டும் என்றும் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார் கனிமொழி.

மக்களவையில்   இன்று (20-ஆம் தேதி) அவர் பேசுகையில், "கரோனா தொற்று  உலகம் முழுவதும் அச்சம் ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் , சமுதாயத் தொற்று ஏற்படாவண்ணம் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்  பிரதமர்  கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை  ஆதரிக்கிறோம். வரவேற்கிறோம்.

 அதேநேரம் , சில நிறுவனங்கள், ஆலைகள் மட்டுமே தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி அளித்து இருக்கின்றன.  இந்தியாவின் தொழிலாளர் சக்தியில் சுமார் 81% தொழிலாளர்கள் அமைப்பு  சாராத தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள், உணவக தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆகியோரின் வருமானம் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிதும் குறையவோ அல்லது ஒன்றும் இல்லாமல் போகவோ வாய்ப்புள்ளது. 
நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் கூட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படா வண்ணம் தடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். 

நான் இந்த அரசை வேண்டிக் கொள்வதும் வலியுறுத்துவதும் என்னவென்றால் இந்தக் குழுவின் முதன்மையான முக்கியமான கவனம் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மீது இருக்க வேண்டும் என்பதுதான்.  அமைப்பு சாராத் தொழிலாளர்களின், அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார் கனிமொழி.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விருந்து பரிமாறிய  கனிமொழி; மகிழ்ச்சியில் உடன்பிறப்புகள் ! 

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Kanimozhi fed the DMK who worked for victory

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை டெபாசிட்டை காலி செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றார். வெற்றி பெற்றதை அடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல் எம்.பி.யாக களமிறங்கினார் கனிமொழி.  ஓட்டு கேட்கப் போகும் போது எப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்றாரோ அதே போல அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். 

Kanimozhi fed the DMK who worked for victory

இதனையடுத்து, கனிமொழி எம்.பி. தனது வெற்றிக்காக கடுமையாக உழைத்த திமுகவினருக்கு விருந்து கொடுத்து மகிழ்விக்க விரும்பினார். அதன்படி திமுக தொண்டர்களுக்கு  இன்று தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியால் மஹாலில்,  சைவம் மற்றும்  அசைவ விருந்து வழங்கினார். தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து வழங்கப்பட்டது.  விருந்தில் கலந்து கொண்ட அனைத்து  நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் பரிமாறி, அவர்களின் நலம் விசாரித்தார்.

Kanimozhi fed the DMK who worked for victory

வயதான மூத்த பெண்மணிகள் சிலர், கனிமொழியிடம் கோரிக்கை மனுக்களும் கொடுத்தனர். சுமார் 8,000 பேர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.  அவர்களுடன் அமர்ந்து கனிமொழியும் சாப்பிட்டார்.  கனிமொழியின் விருந்து வைபவமும் உபசரிப்பும் கண்டு மிகுந்த உற்சாகமானர்கள். இந்த விருந்து வைபத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

“தெருவில் நடக்கும் விவாதம் போல் நாடாளுமன்றம் செயல்படக் கூடாது” - சபாநாயகர் ஓம்.பிர்லா

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Speaker Om Birla said Parliament should not act like a street debate

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் மக்களவையின் சபாநாயகர் பதவிக்காகத் தேர்தல் நடைபெற்றதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார். அதனையடுத்து, 18வது மக்களவையின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில், ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் மற்றும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் ரஷீத் சிறையில் இருந்தபோது பஞ்சாபின் கதூர் சாஹிப் மற்றும் ஜே-கேவின் பாரமுல்லாவில் இருந்து சுயேட்சைகளாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதைக் காட்டுகிறது. 

மக்களவையில் பலமான எதிர்க்கட்சி என்பது கட்டமைக்கப்பட்ட முறையில் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும். இவை சவால்கள் அல்ல, ஒரு வாய்ப்பு. வலுவான எதிர்க்கட்சி தனது கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒப்பந்தங்களும், கருத்து வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்துக்களையும் அரசாங்கம் அறிந்து கொள்கிறது. பார்வைகள் அதிகமாக இருந்தால் நல்லது. ஆனால், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்திற்கும், தெருவில் நடக்கும் விவாதங்களுக்கும் நாட்டு மக்கள் சில வித்தியாசங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.