இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1,273 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 28 நாட்களில் 42 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.