corona virus impact in india

உலக நாடுகளை அச்சுறுத்தும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மால்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், சலூன் கடைகள் திறக்க அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Advertisment

இவ்வாறு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கை நீட்டித்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியபோதிலும் இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3900 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1020 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.