சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயது மருத்துவர் மற்றும் ஆந்திரமாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111home_0.jpg)
இது தொடர்கதையாகி வரும் நிலையில், "மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)