சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை, உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர். அதற்கு காரணம் அந்த உடலில் இருந்து வைரஸ் தொற்று தங்களிடம் பரவிவிடுமோ என்ற அச்சம்தான். சீனாவில் இறந்தவர்களின் உடல்கள் வீதியில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து மக்களிடம் இருக்கும் அச்சத்தை போக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா, "இறந்தவர்களின் சடலத்தின் மூலம் கரோனா பரவாது; தும்மல், இருமல் போன்றவற்றால் தான் கரோனா பரவும். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எரியூட்டுவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது" என்று தெரிவித்துள்ளார்.