/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/89_32.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி, ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது.
இந்தியாவில் நேற்றுஒரேநாளில் 2,183 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 11,542 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி கரோனா பாதிப்பு நேற்று 1,150ஆக இருந்த நிலையில், இன்று 2,183ஆக அதிகரித்துள்ளது. கேரளா மற்றும் டெல்லியில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருவதே தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும்.
Follow Us