Advertisment

'கண்ணியத்துடன் உடல் தகனம் செய்ய வேண்டும்'-தேசிய மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தல்!  

'Corona victims should be cremated with dignity' - National Human Rights Commission instruction!
இந்தியாவிலும்கரோனா இரண்டாம் அலைபரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது எப்படி பேசுபொருளாக இருக்கிறதோ அதேபோல் கரோனாவால் இறந்தவர்கள் உடல்அடக்கம் செய்யப்படுவதும்தற்பொழுது விவாதப் பொருளாகி இருக்கிறது
Advertisment
வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கரோனாவைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில்கடந்த 10ஆம் தேதி பீகாரின் பக்ஸர் பகுதியில், கங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடையதாகஇருக்கலாம்என்றும், கரோனாவால்இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் வசதிகள் கிராமப்புறங்களில் இல்லாததால், கரோனாபரவல் அச்சத்தில் சடலங்கள் ஆற்றில் விடப்பட்டிருக்கலாம்எனவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisment
இந்நிலையில் கரோனாவால் உயிரிழந்தவர்களை கண்ணியத்துடன் உடல் தகனம் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி,கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியத்தை மீறும் வகையில் மொத்தமாக தகனம் செய்ய கூடாது. இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக காத்திருப்பதை தடுக்க தற்காலிக தகன மேடை அமைக்க வேண்டும். இறந்தவர்களின் உடல்களை தொடாமல் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கலாம். மயானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்க வேண்டும்.மின் மயானங்களின்எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
Human Rights Commission India coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe