Corona vaccine - PM consults with district collectors!

Advertisment

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், 50%- க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள 40 மாவட்ட ஆட்சியர்களுடன் டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில், கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மேலும் விரைவுபடுத்துவது, இந்த மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி விகிதம் குறைவாக உள்ளதற்கான காரணம் போன்றவை குறித்தும் பிரதமர் ஆலோசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.