corona vaccine

Advertisment

இந்தியாவில் கரோனாபரவல் அதிகரித்து வரும் நிலையில், பரவலை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாகமக்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில மாநிலங்கள் கரோனாதடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகதெரிவித்துள்ளன. இதனால் அம்மாநிலங்களுக்கும்மத்திய அரசுக்கும் உரசல் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்கரோனாதடுப்பூசி வீணடிக்கப்பட்டதுதொடர்பான புள்ளிவிவரம்ஒன்று, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாகவெளிவந்துள்ளது. ஏப்ரல் 11 வரையிலான அப்புள்ளி விவரத்தின்படி, இந்தியாவிலேயேதமிழ்நாடுதான்அதிக அளவிலானதடுப்பூசிகளை வீணடித்துள்ளது. தமிழ்நாடு 12 சதவீதத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வீணடித்துள்ளது. அதற்கடுத்தடுத்த இடங்களில்ஹரியானா (9.74%), பஞ்சாப் (8.12%), மணிப்பூர் (7.8%) மற்றும் தெலுங்கானா (7.55%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

அதேநேரத்தில்கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, டாமன் மற்றும் டையு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுஆகிய இடங்களில் தடுப்பூசி சிறிதளவு கூட வீணடிக்கப்படவில்லைஎன அந்தப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.