Advertisment

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி இலவசம்! - ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

கதச

இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகின்ற மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஆந்திராவில்,18 வயதுக்குமேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகக் கரோனா தடுப்பூசி போடப்படும் எனஅம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Advertisment

jeganmohan reddy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe