Advertisment

ஒரே நாளில் 75 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை!

jj

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 16 முதல், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

Advertisment

முதல்கட்டமாக இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 75 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி 42 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe