Advertisment

12-18 வயதினருக்கு கரோனா தடுப்பூசி... மத்திய அரசு ஒப்புதல்!

Corona vaccine for 12-18 year olds ... Federal approval!

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தற்போதுதடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் 12 முதல் 18 வயதிற்குக் கீழ்உள்ளோருக்கானகரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 முதல் 18 வயதுக்கு கீழ் உள்ளசிறுவர்களுக்குசெலுத்தஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவைப் பொறுத்தவரை 2 வயதிலிருந்து 8 வயது, 8லிருந்து 14, 12லிருந்து 18 என்று பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பரிசோதனைகள் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில்கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட வந்த நிலையில், மற்ற தடுப்பூசிகளை விட கோவாக்சின் குழந்தைகளுக்கு மிகக்குறைந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது, நல்ல பலனை அளிப்பதாக முடிவுகள் வந்திருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

India Medical VACCINE
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe