corona vaccination drive across india ministry of health and family welfare

Advertisment

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர் என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

இந்தியாவில் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு, கோவாக்சின்) போடும் பணி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (21/01/2021) வரை இந்தியாவில் சுமார் 10,43,534 பேருக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளதாகத்தெரிவித்துள்ளமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்,கரோனா தடுப்பூசிபோட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது.

corona vaccination drive across india ministry of health and family welfare

Advertisment

இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 1,38,807 பேருக்கும், அதற்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் 1,15,365 பேருக்கும், ஒடிசாவில் 1,13,623 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் 42,947 பேருக்குத் தடுப்பூசிபோடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக கோவாவில் 426 பேருக்கும், டையூ & டாமனில் 94 பேருக்கும், லடாக்கில் 240 பேருக்கும், லட்சத்தீவில் 369 பேருக்கும், சிக்கிமில் 773 பேருக்கும், புதுச்சேரியில் 759 பேருக்கும் கரோனா தடுப்பூசிபோடப்பட்டுள்ளது.