jkl

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் சில தினங்களாக 1,000க்கும் குறைவாகக் கரோனா தொற்றுபதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும், இதுவரை 5,52,674 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 5,406 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,947 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment