ADVERTISEMENT

எந்தெந்த மாநிலங்களில் கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது? - மத்திய சுகாதார அமைச்சகம்!

04:56 PM Nov 03, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.

இந்தியாவில் 95 ஆயிரம் வரை சென்ற தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை சில நாட்களுக்கு முன்பு 36 ஆயிரம் என்ற அளவிற்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சென்றுள்ளது. இதனால் கரோனா இரண்டாவது அலை துவங்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அக். 3 முதல் நவ. 3 வரை கேரளா, டெல்லி, மேற்குவங்கம், மணிப்பூர் மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்று பெருமளவு குறைந்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT