ADVERTISEMENT

இந்தியாவில் அரை லட்சத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு!! 

09:54 AM Aug 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டி 26 லட்சத்தை நெருங்கி வருகிறது. 25,89,682 பேருக்கு இதுவரை இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 49,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனா உயிரிழப்பு அரை லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் 18.62 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 994 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 53,322 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல் 6.7 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 63,490 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா உயிரிழப்பு 1.94 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 71.61 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியாவில் இதுவரை 2.93 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 7.46 லட்சம் கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT