CORONA UPDATE IN INDIA

இந்தியாவில் கரோனா பாதிப்பு 25லட்சத்தை தாண்டி 26 லட்சத்தைநெருங்கி வருகிறது. 25,89,682பேருக்குஇதுவரை இந்தியாவில்கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 49,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாஉயிரிழப்புஅரை லட்சத்தை நெருங்கியுள்ளது.இந்தியாவில் 18.62 லட்சம் பேர்கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் 994பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 53,322 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.அதேபோல் 6.7 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 63,490பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கரோனா உயிரிழப்பு 1.94 சதவீதமாகவும், குணமடைந்தோர்விகிதம் 71.61 சதவீதமாகவும் உள்ளது.

Advertisment

இந்தியாவில் இதுவரை 2.93கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.அதேபோல் இன்று ஒரே நாளில் இந்தியாவில்7.46 லட்சம்கரோனாமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.