Corona to Union Minister Nitin Gadkari!

Advertisment

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், காவலர்கள், மருத்துவர்கள், அரசு பிரதிநிதிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் என மக்கள் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.