Corona: Union Health Minister consults with southern states today!

கரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று (28/01/2022) பிற்பகல் 02.30 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

மத்திய அமைச்சரின் ஆலோசனையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார். அதேபோல், லட்சத்தீவு, அந்தமான்- நிகோபார் சுகாதாரத்துறை அமைச்சர்களும் ஆலோசனையில் கலந்துக் கொள்கின்றனர்.

Advertisment

இந்த ஆலோசனையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைக் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.