Advertisment

கரோனா பாதிப்பு அதிகரிப்பு... அக்டோபரில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் - ஆய்வில் தகவல்!

CORONA

இந்தியாவில் சில வாரங்களாக குறைந்துவந்த கரோனாபாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையிலான வாரத்தில், அதற்கு முந்தைய வாரங்களில் பதிவானதைவிட 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இம்மாதத்தில் கரோனாமூன்றாவது அலை ஏற்படும் எனமதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் ஆகியோர்ஐதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள ஐஐடியில் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Advertisment

தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ள கரோனாபாதிப்பு, மூன்றாவது அலையை ஏற்படுத்துமென்றும், அக்டோபர் மாதத்தில் இந்த அலை உச்சத்தைத் தொடும் எனவும்அந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதேசமயம் கரோனா மூன்றவாது அலை, இரண்டாவது அலையைப்போல்மோசமாக இருக்காது எனவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Advertisment

மூன்றாவது அலையின்போது,தினசரி கரோனாபாதிப்பின்எண்ணிக்கை ஒரு லட்சமாக இருக்குமென்றும், கணிக்கப்பட்டதைவிடநிலைமை மோசமானால் தினசரி கரோனாபாதிப்பு ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாக இருக்கும் என அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

third wave corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe