Advertisment

கரோனா மூன்றாம் அலை... அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை! 

Corona Third wave ... Modi consults with all state chief ministers!

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், இன்று கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று காலை வரையிலான 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 63 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisment

நாட்டில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் மூத்த அமைச்சர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisment

modi OMICRON
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe