Advertisment

கரோனா மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா? - ஐ.சி.எம்.ஆர் விளக்கம்!

icmr expert

Advertisment

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே இரண்டாவது அலை ஏற்பட காரணமாக இருந்த டெல்டா வகை கரோனா, மரபணுமாற்றமைடைந்து டெல்டா ப்ளஸ் ஆக மாறியுள்ளது. இந்த டெல்டா ப்ளஸ் வகையால் மூன்றாவது அலை ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இந்தநிலையில் கரோனா மூன்றாவது அலை, இரண்டாவது அலையை போன்று கடுமையாக இருக்காது என ஐ.சி.எம்.ஆரின் தொற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கரோனா மூன்றாவது அலை இரண்டாவது அலை போல கடுமையாக இருக்காது. இந்த அலைகளைத் தணிப்பதில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்துவது மற்றும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது முக்கிய பங்கு வகிக்கக்கூடும்" என கூறியுள்ளார்.

மேலும் அவர், "டெல்டா ப்ளஸ் கரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செயல்திறன் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை, 10 மாநிலங்களில் இருந்து 49 டெல்டா ப்ளஸ் பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது மூன்றாவது அலை தொடங்கிவிட்டது என்பதை குறிக்கவில்லை. இது மூன்றாவது அலையின் ஆரம்பம் என்பது தவறானதாக அமையும்" என கூறியுள்ளார்.

corona virus coronavirus strain ICMR
இதையும் படியுங்கள்
Subscribe