Corona spread; New regulation in Puducherry

Advertisment

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், புதுச்சேரியில் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன், “ஒரு வருடமாகத்தொற்று பரவல் அதிகளவில் இல்லாத நிலையில் சில வாரங்களாக நாட்டில் பரவலாக கொரோனா தொற்று பரவி வருகிறது. குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில்மூன்று தினங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இது வருத்தத்திற்குரியது.

இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை செய்வதில் 15% பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

Advertisment

அதன் காரணமாக புதுச்சேரியில், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான கடற்கரை, சந்தை, திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.