ADVERTISEMENT

அதிகரிக்கும் கரோனா: பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!

05:38 PM Jan 09, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா மற்றும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே சமயம், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09/01/2022) மாலை 04.30 மணியளவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் காணொளி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா மற்றும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் காணொளி மூலமாகக் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளைத் தயார்படுத்துவது, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் கூறுகின்றன.

நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி விரைவில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT