இரண்டாவது நாளாக புதிய உச்சம் தொட்ட கரோனா!

corona

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியா முழுவதுமுள்ளபல்வேறு மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை (08.05.2021) முதல் கரோனாபரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

இந்தநிலையில், இந்தியாவில் நேற்று ஒரேநாளில்4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரேநாளில்இத்தனை பேருக்குகரோனாஉறுதிசெய்யப்படுவதுஇதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு நேற்று முன்தினம் 4 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 915 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில்3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் கரோனாவிலிருந்துமீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 பேர் கரோனாபாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe