Skip to main content

பெட்ரோலிய அமைச்சருக்கு கரோனா... பயத்தில் மத்திய அமைச்சர்கள்!

 

hj


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுநர், முதலமைச்சர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து மத்திய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்