Advertisment

கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவருக்கு 'கரோனா' 

 'Corona' for Kozhikode plane crash victim

கேரளா கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து 2 விமானிகள் உட்பட 18பேர்என, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisment

துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர்டேபிள் டாப்விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.

Advertisment

இந்த விபத்தில்உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.விமானி டி. வசந்த்சாதே, துணை விமானி, ஒரு குழந்தை உட்பட 18பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 190 பேர் பயணித்த விமானத்தில் 14பேர் படுகாயமும்,127பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். 127 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.எஞ்சிய பயணிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார். விமானம் தீப்பிடித்திருந்தால்மீட்புப்பணிகள்மிகவும் கடினமாக இருந்திருக்கும் எனவும்அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த ஒருவருக்குகரோனாதற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் இந்த விபத்தில் காயம்அடைந்தவர்களுக்கும் கரோனாபரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

accident airport corona virus Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe