இந்தியாவில் கரோனாவால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 12,750 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில்கரோனாவுக்கு420 பேர் பலியாகி உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று உயிரிழப்பு 414 ஆகியிருந்த நிலையில்,இன்று இந்தஎண்ணிக்கையானது அதிகரித்துள்ளது.அதேபோல்கரோனாவில் இருந்துகுணமடைந்தவர்கள்எண்ணிக்கை 1,489 இல் இருந்து 1,515 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகம். மகாராஷ்டிராவில் மொத்தம் 2,919 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா, மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில்கரோனாவால்9 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் அந்த பகுதியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 ஆகஅதிகரித்துள்ளது.