Advertisment

கரோனா தொற்றால் பழம்பெரும் நடிகர் காலமானார்

Hulivana Gangadhar

கரேனா தொற்று காரணமாக பழம்பெரும் நடிகரான ஹுலிவானா கங்காதர் காலமானார்.

கன்னட திரையுலகில் பழம்பெரும் நடிகர் ஹுலிவானா கங்காதர். 70 வயதான இவர் தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாக சந்தேகம் வந்ததையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். பின்னர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

100க்கும் மேற்பட்ட படங்கள், 150க்கும் மேற்பட்ட நாடகங்கள் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். உல்டா பல்டா, கிராம தேவத, சப்தவேதி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களால் கவரப்பட்டது. ஹுலிவானா கங்காதருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

Advertisment

infection corona actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe