Skip to main content

சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

kl;

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் அவருக்கு இருப்பதால் சந்திரபாபு நாயுடு தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Chandrababu Naidu's helicopter misses its way, causing excitement

இந்தாண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் 175 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கும், 25 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தொடங்கி பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனஜன சக்தி கட்சியுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை செய்தனர்.

இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது. ஏ.டி.சி.யுடன் ஒருங்கிணைப்பு இல்லாததால் வழி தவறி வேறு திசையில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றதால் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. 

Next Story

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது?

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Former Chief Minister of Andhra Pradesh Chandrababu Naidu arrested

 

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதில் பணத்தை முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.