ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரம் கரோனா பாதிப்புக்கள்... 671 பேர் பலி!

07:29 AM Jul 19, 2020 | suthakar@nakkh…


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 1,44,22,125 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 86,11,236 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 52 ,06,070 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவை பொறுத்த வரையில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,38,716 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6,53,751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 671 பேர் பலியாகியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT