Corona increased in India after a year

Advertisment

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒருஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.

இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் இந்தியஅரசு வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்று 4 ஆயிரம், 5 ஆயிரம் எனப் பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.