ADVERTISEMENT

இந்தியாவுக்கே பாடம் எடுக்கும் மும்பை தாராவி... கரோனாவுக்கு கடிவாளம் போட்ட மக்கள்!

08:59 PM Aug 08, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் அது பலனளிக்கவில்லை என்பது தற்போது உறுதியாகி வருகின்றது.

இந்தியாவில் குறிப்பாக மராட்டியத்தில் கரோனா கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அங்குள்ள தாராவி பகுதி கரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வந்தது. சுமார் 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியில் 8 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அந்தப் பகுதியில் முதல் கரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வந்துள்ளது. தற்போது பாதிப்புகள் சற்று குறைய தொடங்கி உள்ளது. இதுவரை 2,612 பேருக்கு அங்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 80 பேர் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20க்கும் குறைவாகவே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 83 பேர் நோய்த் தொற்று காரணமாக தற்போது மருத்துவமனையில் இருக்கிறார்கள். அரசாங்கத்தின் விதிமுறைகள் அனைத்தையும் அங்குள்ள மக்கள் கடைபிடித்ததே நோய்த்தொற்று குறைவதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT