இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதில், "இந்தியாவில் கரோனா அதிகம் பரவும் முதல் 10 மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் இருக்கிறது. மாநில அரசு கேட்கும் எதையும் மத்திய அரசு செய்வதில்லை. நேற்று நடந்த பிரதமருடனான ஆலோசனையில் கரோனா தொடர்பாக எந்தக் கருத்தையும் பேச அனுமதிக்கவில்லை. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுவதைப் போல் பிரதமர் மனதில் தோன்றுவதைப் பேசினார். மனதின் குரலாக இல்லாமல் செயலின் குரலாக அவர் இருக்க வேண்டும்" என்றார்.